தமிழ் புத்தாண்டு தினம்: 449 ரயில் சேவைகள் இயக்கப்படும்.!!

     -MMH
     சென்னை: தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புகா் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு தினம் வரும் புதன்கிழமை (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படவுள்ளன. அதாவது, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை- வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் புகா் ரயில்களின் 449 சேவைகள் இயக்கப்படும்.

இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments