45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி!!
கோவை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் முதல் கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்திருந்தனர். தற்பொழுது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments