சிங்கம்புணரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா! பொதுமக்கள் கவனமாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

     -MMH

     நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நிலையில், சிங்கம்புணரி பகுதியிலும் அதன் தாக்கம் தெரிகிறது. ஏற்கனவே சிங்கம்புணரி அருகில் உள்ள கிராமமான சேர்வைகாரன்பட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிங்கம்புணரியின் நகர்ப்புறத்திலும் கொரோனாவின் தாக்கம் தெரிகிறது.

நேற்று, பண்டாரம் காலனி பகுதியை சேர்ந்த 50 வயதான ஆணுக்கும், இன்று கண்ணமங்கலப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், முழுவீரன் தெருவைச் சேர்ந்த 60 வயது ஆணுக்கும், சிலோன் காலனியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கொரோனா தொற்றை பரவாமலும், கட்டுக்குள் வைக்கவும், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமுள்ளோர் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையிலான மருத்துவ குழுவினர் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

மேலும் முகக் கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments