சலூன் கடைகளை 5 மணி நேரம் திறக்க கோரிக்கை!!
சலூன் கடைகளை தினமும் 5 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சலூன் கடைகள் முழுவதுமாக அடக்க சொல்வதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் மேலும் பல கடைகள் திறக்கப்பட்டிருக்கும்போது சலூன் கடையை மட்டும் மூட சொல்வது நியாயம் இல்லை. அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
எனவே தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 5 மணி நேரம் வரை மட்டும் கடைகளை திறந்து முடிதிருத்தும் பணி செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
-அருண்குமார், கோவை மேற்கு.
Comments