திருப்பத்தூரில் 6 பேருக்கு கொரோனா! பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்!
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக உள்நோயாளியாக இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பெண் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த நோயாளிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் அந்த அறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த அறை மூடப்பட்டது. உள்நோயாளிகள் 20க்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றால் பாதித்த 52 வயது பெண் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து திருப்பத்தூர் அருகே உள்ள மணமேல்பட்டி கிராமத்திற்கு வந்த 2 நபர்களுக்கும் திருப்பத்தூரில் 2 நபர்களுக்கும் கொளுஞ்சிப்பட்டியில் ஒருவருக்கும் என 6 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரதுறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
- அப்துல் சலாம், திருப்பத்தூர்.
Comments