6,877 வீடுகள் கட்டும் வீட்டுவசதி வாரிய திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல்!!
சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல்வேறு திட்டங்களுக்காக குடிசை மாற்று வாரியம் சி.எம்.டி.ஏ., ஆகியவை கோரின. இருப்பினும், இங்கு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்ட வீட்டுவசதி வாரியம் உறுதியாக இருந்தது. இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் நடை முறைகள் முடிக்கப்பட்டன.
இதையடுத்து இதற்கு திட்ட அனுமதி கோரி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பித்தனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான ஒப்புதல் கடிதம், சமீபத்தில் கிடைத்துள்ளதாக, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறினர். ஆரம்ப சுகாதார நிலையம், தபால் அலுவலகம், சமுதாய கூடம், அங்கன்வாடி மையம் ஆகிய சிறப்பு வசதிகளுடன் இந்த குடியிருப்பு கட்டப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-கார்த்திக், தண்டையார்பேட்டை.
Comments