சிங்கம்புணரி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மஞ்சுவிரட்டு! 6 பேர் மீது வழக்குப்பதிவு!

 

-MMH

          சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

தடையும் மீறி சிலர் மாடுகளை கொண்டு வந்து ஆர்.பாலக்குறிச்சி பெரிய கண்மாய் பகுதியில் சிலர் கட்டுமாடுகளை அவிழ்த்து மஞ்சுவிரட்டு நடத்தினர். எனவே, தடையை மீறிமாடுகளை அவிழ்த்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய பொன்னன், ராமநாதன், கந்தசாமி, ஆனந்த குமார், சத்தியராஜ், குணா ஆகிய 6 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments