போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை!!
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது மாநகரம் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அனைத்து ஊழியர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் இளங்கோவன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டும் தொற்று ஏற்படாமல் நலம் அடையும் வரை சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
-சுரேந்தர்.
Comments