பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் 82 பேருக்கு கொரோனா..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பரவல் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளது.

பொள்ளாச்சி நகரில் 1.பாரதி நகர்

2.தமிழன் நகர் 

3.ஆரோக்கியநாதர் வீதி 

4.மகாலிங்கபுரம் 

5.அண்ணா நகர் 

6.ராஜாமில் ரோடு. 

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

வடக்கு ஒன்றியத்தில்: 

1.நெகமம் 3.அனுப்பர்பாளையம் 3.வெள்ளாளபாளையம் 4.ரங்கம்புதூர் 5.டி.காளிபாளையம் 6.ஆ.சங்கம்பாளையம் 7.லெட்சுமி நகர் 8.சேரன் நகர்  ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும். 9.தமிழ்மணி நகரில் 2 பேருக்கும் 10.கொல்லப்பட்டியில் 2 பேருக்கும் சேர்த்து மொத்தம் 12 பேருக்கும்.

ஆனைமலை ஒன்றியத்தில்: 

15 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

கிணத்துக்கடவு பகுதியில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தொற்று பாதித்த பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது என சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் தொற்று பாதித்த நபர்களின் வீடுகள் முன் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 

இதை தவிர அண்ணா காலனி, தன்னாச்சியப்பன் கோவில் வீதி, ஆர்.கே. நகர், வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொற்று அதிகமாகி வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி நிருபர்.

Comments