இந்து அமைப்பினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்!! நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி!!

     -MMH

அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்லும் இந்து மக்கள் கட்சி பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இது தமிழகம் முழுவதும் தொடர்வதால் திராவிடர் கழக இயக்கங்களையும், விடுதலை சிறுத்தை கட்சியையும் தடைசெய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அவர்,இந்த கோரிக்கையை வலியிறுத்தி தமிழகத்தின் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகம் அல்லது அந்த தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையம் முன்பாக மாநிலம் தழுவி, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.தொடர்ந்து அவர்,அண்ணல் அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர் எனவும்,அவரை தனிப்பட்ட அரசியல் கட்சியினர் சொந்தம் கொண்டாடுவதை கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் ராமநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments