தொழில் வரி பிடித்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்!! - தேயிலை தொழிலாளர்!!

      -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட்டுகளில் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பராமரிப்பு இல்லாத பழைய வீடுகளில் தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் சம்பளத்தில் ஆண்டுதோறும் தொழில் வரியாக 832 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து தேயிலை தொழிலாளர்கள் கூறுகையில், "வால்பாறையில் மூன்று தலைமுறைக்கும் மேலாக தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் மிகவும் குறைந்த சம்பளத்தில் வனவிலங்கு, மனித மோதலுக்கு இடையே உயிர் பயத்துடன் பணிபுரிந்து வருகிறோம். இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தொழில் வரி பிடித்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தேயிலைத் தொழிலாளர்களின் குரலாக உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-செந்தில்குமார், வால்பாறை.

Comments