கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களை தீவிர விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக சோதனைச் சாவடியில் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களை தீவிர விசாரணை மேற்கொண்டு இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர் அதிகாரிகள்.
மேலும் வாகனத்தில் வருபவர்களிடம் கட்டாயம் முக கவசம் அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இரண்டாம் கட்ட நோய் தொற்று வால்பாறையில் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத் துறையும், காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் வால்பாறை மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் வால்பாறை மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-செந்தில்குமார், முடீஸ்,வால்பாறை.
Comments