தந்தை ஒருவர் தன்னுடைய பிறந்த குழந்தைக்கு வைத்த பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!

    -MMH

தற்போது உள்ள காலகட்டத்தில் பெற்றோர் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது வித்யாசமான பேரை வைத்து விட வேண்டும் என திருமணதிற்கு முன்பே முடிவு செய்து விடுகின்றனர். வாயில் நுழையாத பெயரை வைப்பதே தற்போது டிரென்ட் ஆக மாறியுள்ளது. இதன் விளைவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திரைப்படங்கள், இடங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் எண்கள் போன்ற பெயர்களை சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் வசித்து வரும் ஸ்லேமெட் யோகா என்ற நபர் தனது குழந்தைக்கு வைத்த வித்தியாசமான பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஸ்லாமெட் யோகாவின் மனைவி ரிரின் லிண்டாவிற்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், யோகவே குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு 'டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டாட்டிஸ்டிகள் கம்யூனிகேசன் (Department of Statistical Information)' என்று பெயரைச் சூட்டியுள்ளார்.

ஸ்லாமெட் யோகா இந்த பெயரை வைப்பதற்கு காரணத்தையும் கூறியுள்ளார். அவர் சொன்ன காரணம், "2009 இல் இந்தோனேசிய சிவில் சேவையில் நுழைந்து அரசு ஊழியராக பணியாற்றிய அவர், அதன் பிறகு புள்ளிவிவர தகவல் தொடர்புத்துறையில் பல ஆண்டுகளாக அவர் வேலை செய்து வந்துள்ளார். இதனால் தான் அவர் தனது குழந்தைக்கு (Department of Statistical Information)' என்ற வித்தியாசமான பெயரை வைத்துள்ளார். மேலும் இந்த வித்தியாசமான பெயர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

-சுரேந்தர்.

Comments