மின்கம்பம் எரிந்தும் பயனில்லை...அச்சப்படும் மதுக்கரை பகுதி மக்கள்.!!

     -MMH 
     மின்கம்பம் எரிந்தும் போதிய வெளிச்சம் இல்லாததால்.! அச்சப்படும் மதுக்கரை பகுதி மக்கள்..!!

கோவை மாவட்டம் மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியில் இரவு நேரங்களில், சரியான மின்விளக்கு சாலை வசதிகள் இல்லை. மின்விளக்கு எரியும் பொழுது போதுமான வெளிச்சம் கிடைப்பதில்லை. 

இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் முதியவர்களும் பெண்களும் குழந்தைகளும் மிகப்பெரிய அச்சத்தில் இருகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு வெளிச்சமான பகுதியாக அமைத்து தர வேண்டும் என்றும், இந்த மின் விளக்கு கம்பங்கள் அகற்றிவிட்டு எல்இடி முறையில் இருக்கக்கூடிய மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்றும் மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதி பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-ஷாஜஹான், ஈசா.

Comments