ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் பெற்ற கேரளத்து முதல் பெண்மணி..!!
46 வயது; 4 குழந்தைகளின் தாய். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை பகுதியை சேர்ந்த ரேகா கேரள மாநில மீன் வளத்துறையிடம் இருந்து (State Fisheries Department) ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence) பெற்ற கையோடு, தன் கணவரோடு இணைந்து, தங்களுக்குச் சொந்தமான சிறிய, பழைய படகில் தங்கள் குடும்பத்தைக் காக்க அன்றாடம் 20/30 மைல் தூரம் அரபிக் கடலின் ஆழமான பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்று வருகிறார் ரேகா என்ற பெண்மணி.
எந்தவித நவீன கருவிகளும் இல்லாமல் ஆழ்கடலில் பயணிக்கும் போது, எங்களைக் கடலம்மா பாதுகாப்பார் என்று குறிப்பிடுகிறார் ரேகா.
(CMFRI)இயக்குனர், A.கோபாலகிருஷ்ணன், "காயல்களிலும், ஆறுகளிலும் மீன் பிடிக்கச் செல்லும் பெண்களை நாங்கள் அறிவோம்; ஆனால் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் முதல் பெண்மணி இவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்...
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
Comments