மன்னார்குடி காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!!

   -MMH

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் கோட்டம் சார்பில் டிஎஸ்பி திரு.இளஞ்செழியன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கம் மற்றும் சேவை சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை வடக்கு வீதி ஏ கே எஸ் மஹாலில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் தடுக்க  முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் தேவையின்றி  பொது வெளியில்   நடமாடுவதை தடை செய்ய வேண்டும், தாங்களாகவே முன்வந்து தேவையற்ற பயணங்களை, நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை காவல்துறை சார்பில் வழங்கினார்கள்.

மன்னார்குடி இன்ஸ்பெக்டர் திரு ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் திரு.முருகன்   மற்றும் போலீசார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர். காவல்துறை கொரோனாவை  கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். மன்னார்குடி காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை அனைத்து சங்கத்தினரும் பொதுமக்களுக்கும் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்புநிதி, ரைட் ரபிக் மன்னார்குடி.

Comments