அரசு கலை கல்லுாரி தடுப்பூசி மையமாக மாற்றம்!!

  -MMH

கோவை அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையம், கோவை அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. இங்கு, கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பூசி மையம், கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments