சாலையில் தொங்கும் மின் கம்பிகள் அச்சத்தில் மக்கள்!!

    -MMH

திருப்பூர் காலேஜ் ரோட்டில் சிக்கண்ணா காலேஜ் பின்புறம் உள்ள வீதியில் மின்கம்பி மிகவும் கீழே செல்கிறது கனரக வாகனங்கள் வந்தால்  விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அருகாமையில் சரணாலய மற்றும் பிரேமா பள்ளிகள் உள்ளது மேலும் கார்மெண்ட்ஸ் உள்ளது. 

தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களும் மக்களும் செல்லக்கூடிய இந்த வீதியில் இதுபோன்று மின்கம்பி தாழ்வாக இருந்தால் ஆபத்தானது.  தற்பொழுது  கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு உண்டாகி வரும் நிலையில்,  பள்ளிகள் இயங்காததால் பள்ளி  வாகனங்களின் போக்குவரத்து இல்லை ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். விரைவில் சரி செய்துவிட்டால் வரக்கூடிய காலங்களில் வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து பள்ளிக் குழந்தைகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, ஈசா.

Comments