தட்டித்தடுமாறும் திருவல்லிக்கேணி!!
சென்னையின் முக்கிய கேந்திரமாக திகழும் திருவல்லிக்கேணி மக்கள் அடர்த்தியுடன் வாழும் பகுதியாகும் . மருத்துவத்திற்கும் , சுற்றுலாவிற்கும் , வேலைக்கும் சென்னை வருவோருக்கும் அடைக்கலம் தரும் கூடுகள் ( மேன்சன்கள்) நிரம்பியிருக்கும் பகுதியாகும் , மதுரை நகருக்கு எப்படி நடுநிசியிலும் உணவுகள் கிடைக்கும் என பெயருண்டோ அதுப்போல சென்னையில் மண்ணடிக்கு அடுத்து திருவல்லிக்கேணியையும் சிறப்புடன் அழைக்கலாம்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மகாகவி பாரதியார் பல ஆண்டுகளும் , நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சில நாட்களும் தங்கியிருந்த இப்பகுதி தற்போது தெருக்களின் சுருக்கம் , மக்களின் அடர்த்தி , போக்குவரத்திற்கு ஏதுவான இருபுற சாலைகள் இருப்பினும் கூட சாலைகளின் ஒரங்களில் வாகனங்கள் நிறத்தப்படுவதினால் போக்குவரத்து இடையூறு போன்ற காரணத்தால் சாலையில் மக்கள் இலகுவாக கடப்பதற்க்கும் மிகவும் அல்லோலப்பட வேண்டியதுள்ளது.
மீர்சாகிப்பேட்டை , ரத்னா கேப் போன்ற இடங்களில் சாலை காய்கறிகள் கடைகள்,சாலையோர வியாபாரிகளினால் இன்னும் நெருக்கடிகள் அதிகரித்து மாநகர பேருந்துகள்கூட ஊர்ந்து செல்லமிகவும் தள்ளாடுகின்றது , இதன் காரணத்தால் வாகனங்கள் இம்மார்கத்தில் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கவேண்டியதுள்ளது, இதனால் அவ்வப்போது விபத்துகளும் நிகழுகின்றது.
ஒழுங்குபடுத்தப்பட்ட சாலை நெறிமுறைகளும் , முறையான சிக்னல் வசதிகளும் , போக்குவரத்து காவலர்களும் இருந்தால் இத்தகைய நெருக்கடிகள் நிகழாது என எத்தனையோ முறைகள் அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பின்பும் காட்சிகள் மாறிடவில்லை!! இனியாவது சீராகுமா??
-நவாஸ்.
Comments