தனியார் இடத்தில் குப்பைகளை கொட்டும் பொதுமக்கள்!! - கண்டுகொள்ளாத மாநகராட்சி..!!
கோவை மாவட்டம் வெள்ளலூர், எல்ஜி பள்ளிஅருகே, குடியிருப்புப் பகுதிகள் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் தனியார் நிலத்தில், தங்களுடைய குப்பைகளை கொட்டு வதாகவும் அதனால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நோய் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லாத காரணத்தினால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, ராஜேஷ் .
Comments