தெருவோர குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்..!!

 

     -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் வசிப்பவர்கள் குப்பைகளை தொட்டியில் போடாமல் ரோட்டில் போட்டு விட்டு செல்வது மன வருத்தம் அளிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை சரிவர பராமரிப்பதில்லை என்று ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடைந்த குப்பைத்தொட்டிகள், பற்றாத குப்பைத்தொட்டிகள் ரோட்டை அபகரித்த குப்பைத்தொட்டிகள் என பல பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில் சாரமேடு சாய் நகர் போத்தனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கொரோனா தொற்றுபரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற குப்பைகளை சாலையோரத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று என்றும் நோய் பரவலை தடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பீர்முகமது, குறிச்சி.

Comments