வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அதிர்ச்சி..!!

 

-MMH

           கோவை மாவட்டம். வால்பாறையில் கடந்த சில நாட்களாகவே, சிறுத்தைப்புலி நடமாட்டம், அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்பட்டு வருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று, ஊருக்குள் புகுந்து இருந்த காட்சியை, கண்டு இருந்தோம், அதை வனக்காவலர்கள் துரத்தி அடித்த நிலையும், இருந்தது அதே போல் இன்று சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் வனத்துறையினர் அந்த சிறுத்தையை விரட்டியடிக்கும் வகையில், வெடிகள்வைத்து விரட்டி வருகின்றன. இந்நிலையில், சிறுத்தை புலி ஊருக்குள் நடமாட்டம் இருப்பதாக அறிந்த வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும், கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களின் அச்சம் நிலவ வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கொடுத்து வருவது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யா குமார், ஈசா.

Comments