வால்பாறை நகராட்சி தங்கும் விடுதிக்கு சீல்!!
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் நகராட்சி ஆய்வு மாளிகையில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒப்பந்த பணிகள் நடைபெறுவதாகவும் திமுக கூட்டணி வேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜ் உத்தரவின்பேரில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சரவணக்குமார் வால்பாறை நகராட்சியில் உள்ள நகராட்சி தங்கும் விடுதிக்கு அதிரடியாக சீல் வைத்தார்.
-G.திவ்யா குமார், வால்பாறை.
Comments