ரெம்டெசிவிர் - உயிர் காக்கும் மருந்தா!! உண்மைகளும்.. கட்டுக்கதைகளும்..

    -MMH

ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா பாதித்தவர்களை மரணத்திலிருந்து பாதுகாப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இதனால், கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கூட, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமலேயே, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு வாங்கி ஊசி மூலம் செலுத்திக் கொள்கின்றனர். உண்மையிலேயே ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்தா என்றால் நிச்சயம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவ நிபுணர்கள் கூறும் அறிவுரைகள்:

1.கொரோனா நோயாளிகளில் 99% பேர் பெரிய அளவில் பாதிப்பில்லாமல், வீட்டில் தனிமைப்படுத்துதல் மூலமாகவே குணமடைவர். அவர்களுக்கு பாராசிட்டமல் போன்ற, காய்ச்சலுக்கான வழக்கமான மாத்திரைகள் மட்டுமே போதுமானது.

2.மற்ற 1% அதிக பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அவசியமாகும்.

3.அவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்காமல் இருத்தல், வென்டிலேட்டர் பொறுத்தும் அளவுக்கு பாதிப்பு தீவிரமடையாமல் தடுத்தல், இறப்பை தடுத்தல் ஆகிய சிகிச்சைகளே தரப்படுகின்றன.

4.இவற்றில் எதையும் ரெம்டெசிவிர் மருந்து செய்யாது. காய்ச்சல் அதிகரிப்பதை தடுக்காது, இறப்பை தடுக்காது. எனவே, இது ஒரு உயிர்காக்கும் மருந்தல்ல.

5.இவை, அனைத்தும் உலக சுகாதார நிறுவனம் போன்ற முக்கிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

6.ரெம்டெசிவிர் மருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கால அளவை குறைக்கலாம். 14 நாள் தங்கி சிகிச்சை பெறும் காலத்தை 12 நாட்களாக குறைக்கும்.

7.ஐசியுவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ரெம்டெசிவிரை பயன்படுத்த முடியாது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் பரிந்துரை செய்யப்படுகிறது.

8.இதுதவிர, உயிரை காக்கும் மருந்தல்ல ரெம்டெசிவிர்.

9.எனவே, மருந்தை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டாம். ரெம்டெசிவிர் மருந்தை தேடி உறவினர்கள் அலைய வேண்டாம். வெளி மார்கெட்டில் அதிக விலை கொடுத்து, போலி மருந்துகளை வாங்கி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு டாக்டர்கள் கூறுகின்றனர்.

- ராயல் ஹமீது.

Comments