கார் ஷோரூமில் தீவிபத்து!!
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கார் ஷோரூமுக்கு சர்வீஸ் செய்வதற்காக பல்வேறு இடங்களிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் வந்திருந்தன. இந்நிலையில் ஷோரூமுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை திடீரென ஒன்றன்பின் ஒன்றாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments