தமிழகத்தில் வெப்பநிலை குறையும்! - சென்னை வானிலை மையம்.!!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: "தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து, தமிழக பகுதிகளில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாட்களை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவையில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். வட கடலோர மாவட்டங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.
தெற்கு மற்றும் தென் கிழக்கு திசை காற்றால், வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதால் வரும் 7, 8ல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை மட்டுமே உயரும். நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெம்பக்கோட்டையில், 3 செ.மீ. மழை பெய்து உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. வேலுார், திருத்தணி, திருச்சி, திருப்பத்துார், சேலம், மதுரை விமான நிலையம், தர்மபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 37.7 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. நேற்று முன்தினம் வரை அதிகபட்சமாக கொளுத்திய வெப்பநிலை நேற்று பல இடங்களில் குறைந்தது. சென்னை, கோவை, கன்னியாகுமரி, காரைக்கால், புதுச்சேரி, நாகை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முந்தைய நாட்களை விட நேற்று வெப்பநிலை குறைந்தது.
நாளைய வரலாறு செய்ததற்காக,
-V.ருக்மாங்கதன், சென்னை.
Comments