சென்னை மாநகராட்சிக்கு கொரோனா சிறப்பு அதிகாரி நியமனம்!!

   -MMH

சென்னை: தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில், சிகிச்சை முறைகள் குறித்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு உதவுவதற்காக வழிகாட்டிப் பிரிவு நிர்வாக இயக்குனர் டாரஸ் அஹமது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் பிறப்பித்து உள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments