வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு..!!

-MMH

வால்பாறை நகரப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தி வைப்பதால்  பிற வாகனங்களுக்கு வழி விடுவது இல்லை இதனால் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். 


வாகன ஓட்டிகள்  வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் வாகனங்களை  மெயின்ரோட்டில் நிறுத்திக் கொள்வதால்  அவசர உதவிக்கு அவசர நேரங்களில் பல உயிர்களைக் காப்பாற்றும் 108 வாகனம் வருவதற்கும் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு  காவல்துறை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  மேலும்  வால்பாறை நகராட்சி நிர்வாகம் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் வாகன ஓட்டிகள். 

-G.திவ்யாகுமார் வால்பாறை.

Comments