இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும்!!
இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இரவு பிறை தெரிந்ததால் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் இன்று நோன்பை தொடங்கினார்கள். நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மசூதிகளில், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தொழுகையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.
Comments