மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது!!
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2021 மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முதுநிலை நீட் தேர்வு வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர் . இந்நிலையில் , மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 18ஆம் தேதி நடத்தப்பட இருந்த மருத்துவ முதுநிலை படிப்புக்காக நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தேர்வை நடத்துவதற்கான மறுதேதி, ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-சுரேந்திர குமார்.
Comments