உயிர்தப்பிய சிவகங்கை ஆட்சியர்! இருசக்கர வாகனத்திற்கு வழி விடும் போது விபத்து!

 

-MMH

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிவகங்கையிலிருந்து, காரைக்குடியிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஆய்வு செய்ய காரில் சென்றார்.

அப்போது, காளையார்கோவில் அருகே காலக்கண்மாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்திற்கு வழிவிடும் நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்சியரின் கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது .

இதில் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் மணிகண்டன், கார் ஓட்டுநர் செபஸ்டியான் ஆகியோர் காயமடைந்து சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

-சங்கர், தேவகோட்டை.

Comments