ஏசி மெஷினுக்குள் பாம்புகள்! அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர்!

 

-MMH

                  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அச்சுக்கட்டில் அழகு பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட ஒப்பந்ததாரரான இவர், தனது வீட்டில் ஏசி மெஷினுக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர், ஏசி மெஷினை பிரித்து ஆய்வு மேற்கொண்டதில் பெரிய பாம்பு ஒன்றும், அதனுடன் நான்கு குட்டிகளும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாம்புகளை பத்திரமாக மீட்டு அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோடைக்காலம் என்பதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள ஏசி மெஷினுக்குள் பாம்புகள் புகுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே வீட்டில் தண்ணீர் அதிகம் புழங்கும் இடங்கள், குளிர்ச்சியான இடங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி மெஷின் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஏசி மெஷினில் நான்கு பாம்புகள் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments