தமிழக அரசின் உத்தரவுப்படி மாசி மாத திருவிழா தள்ளி வைக்கப்படும்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதி பகுதியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளித் தேரோட்டம், விநாயகர் தேரோட்டம் உள்ளிட்ட நிகிழ்ச்சியோடு மூன்று நாட்களுக்கு படு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு மாசி மாதம் நடக்கவேண்டிய திருவிழா நடக்கவில்லை.
இந்நிலையில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததால் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மீண்டும் மாரியம்மன் கோவில் திருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது, அதில் வருகிற 20-ஆம் தேதி சாத்தப்படுவதாக இருந்த தேர் திருவிழா, தமிழக அரசின் உத்தரவுப்படி தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.
Comments