தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்படுமா!!

      -MMH

         தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை அரசு வெளியிட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக குறைந்தது இரண்டு நாட்கள் முழு முடக்கத்துடன் கெடுபிடியுடன் கூடிய கடும் நெறிமுறைகளும் அறிவிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதி நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைகிறது. புதிய கட்டுப்பாடுகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகும் நோய் பரவல் அதிகரித்ததால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இது தவிர கடந்த 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், 3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலுான்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தினசரி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது. சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 2 காலை 8:00 மணிக்கு எண்ணப்பட உள்ளன. 

கொரோனா காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக மே 1, 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. உத்தரவு ஏற்கனவே ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா நோய் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு நீட்டிப்பு இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை தமிழக அரசு சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடை யில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தால் அதற்கேற்ப தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், V. ஹரிகிருஷ்ணன்.

Comments