கோவை மதுக்கரை முஸ்லிம் காலனியில் தொடரும் மின்தடை !!

   -MMH

கோவை மாவட்டம் மதுக்கரை முஸ்லிம் காலனி  பகுதியில் இரண்டு மூன்று நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் கோடைகாலம் என்பதால் வீட்டினுள் முடங்கிக் கிடக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

கொரோனா காலம் என்பதால் வெளியேயும் அதிக நேரம் சுற்றித்திரிய இயலாது இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் ரமலான் காலம் என்பதால் நோன்பு இருக்கக்கூடியவர்கள் மாலை வேளை உணவு தயார் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் இதைக் கருத்தில் கொண்டு மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், மதுக்கரை.

Comments