ஆரஞ்சு பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் புற்றுநோயை தடுக்குமா!!

   -MMH

கோவை மாவட்டம் பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.  ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கிராம் எடை 100பழத்தில் நீர்ச்சத்து – 88.0 கிராம் , புரதம் – 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப் பொருள் – 0.3 கிராம், பாஸ்பரஸ் – 18.0 மி.கிராம், சுண்ணாம்புச் சத்து – 24.0 மி.கிராம், கரோட்டின் – 1100 மி.கிராம், சக்தி – 53.0 கலோரி, இரும்புச் சத்து – 0.2 மி.கிராம் , வைட்டமின் ஏ – 99.0 மி.கிராம், வைட்டமின் பி – 40.0 மி.கிராம், வைட்டமின் பி2 – 18.0 மி.கிராம் , வைட்டமின் சி – 80 மி.கிராம். 

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது.வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழம் நுரையீரல் புற்றுநோயையும் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆரோக்கியராஜ், ஈசா.

Comments