ஆழியாறு அருகே வழிபாட்டுத் தலத்தில் திடீர் பள்ளம்..!! பக்தர்கள் அதிர்ச்சி!!
பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆழியார் அணை இந்த அணைக்கு நேரெதிரே தடுப்பணை உள்ளது இந்த தடுப்பணையில் மேல்பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது இந்தக் கோவிலின் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது இதை அறிந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தடுப்பணையில் குளித்து வந்த சுற்றுலா பயணிகள் பள்ளத்தை பார்க்க குவிந்தனர் இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது இதை அறிந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்ததுடன் உடனடியாக சரி செய்யும்படி உத்தரவிட்டனர்.
இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் எப்படி திடீரென பள்ளம் ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொண்டு அதை சரியாக சரி செய்தாள் நல்லது என்கின்றனர் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments