சிங்கம்புணரியில் நாளை இலவச கொரோனா தடுப்பூசி முகாம்!!

     -MMH

சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாளை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையமும், சிங்கம்புணரி அரிமா சங்கமும் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

சுந்தரம் நகரிலுள்ள மக்கள் மன்றத்தில் நாளை காலை ஒன்பது மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை இலவச கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டை அவசியம் எடுத்து வரவேண்டும்.

45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாளன்றும், அதற்கு முதல் நாளும் மது அருந்தக்கூடாது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையுமாறு பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு அவர்கள் தலைமையிலான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-  ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments