கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது!! - மநீம தலைவர் கமல்ஹாசன்!!

     -MMH
     கோவை: கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிங்காநல்லூர்  தொகுதிக்கான மநீமவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் மக்கள் குறைகள், கருத்துக்களை எம்எல்ஏ உடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள சிறப்பு செயலி உருவாக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் பூங்கா, சிங்காநல்லூரில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இதைடடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், எந்த இசமும் நிரந்தர தீர்வல்ல எனத் தெரிவித்தார். அரசியல் எனக்கு தொழில் அல்ல. எனக்கு கடமையாகியுள்ளது எனவும், எனது தனித்திறமையை காட்ட வாய்ப்பை கேட்டு வந்துள்ளேன் எனவும் அவர் கூறினார். 

கோவை பாஜக ஊர்வலகத்தில் மோதல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, இதற்கு பதில் சொல்வது எனது தரத்தை குறைத்துவிடும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என பதிலளித்தார். துக்காடா துக்காடாவாக இருந்த ராஜ்ஜியங்கள் இணைந்து இந்தியா உருவாகியது எனவும், துக்காடாவை அவமான எடுத்தால் அவமானம் தான் எனவும் அவர் தெரிவித்தார். லிப் சர்வீஸ் மட்டுமே செய்வதாக  கூறிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கருத்து குறித்த கேள்விக்கு, துக்காடாவை தவறான அர்த்தத்தில் எடுத்திருந்தாலும், அவர்கள் தரத்திற்கான தகுதியை இந்த கமெண்ட் மூலம் நிருபீக்கிறார்கள் எனப் பதிலளித்தார். நேர்மை ஒன்றே தனது பலம் எனவும், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments