கர்ப்பகாலத்திலும் களத்தில் இறங்கி வேலை செய்யும் பெண் டிஎஸ்பி!!

  -MMH

கர்ப்பகாலத்திலும் களத்தில் இறங்கி வேலை செய்யும் பெண் டிஎஸ்பி குவியும் பாராட்டுக்கள்!!

இளம் போலீஸ் டிஎஸ்பி ஷில்பா, ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வலைதளங்களில் ேஷர் ஆகிறது. ஷில்பா, ஐந்து மாத கர்ப்பிணி. அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் ஏரியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா. தண்டேவாடா என்றதும் நினைவுக்கு வருவது மாவோயிஸ்ட்களும் துப்பாக்கிச் சண்டையும்தான்.

பதற்றம்மிக்க அந்த ஏரியாவில் ஷில்பா, லத்தியுடன் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் பணி செய்கிறார். வாகனத்தில் வருவோரிடம் கொரோனாவின் தீவிரத்தை எடுத்துக் கூறி, ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்கும்படி அறிவுரை கூறுகிறார். கொரோனா வேகமா பரவுது நாடே நிம்மதி இல்லாம கிடக்குது. இந்த நிலைமைல லீவு எடுக்க மனம் வரலை ஊரடங்கை நல்லமுறையில அமல்படுத்துனாதான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். 

அதான் 5 மாசமா இருந்தாலும் களமிறங்கி வேலை பாக்குறேன் என்றார், ஷில்பா. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியிலும் துணிச்சலுடன் செயல்பட்டு பரபரப்பாக பேசப்பட்டவர்தான் இந்த ஷில்பா. ஷில்பாவின் கணவரும் போலீஸ் அதிகாரிதான். மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணிதான் இவர்களை சேர்த்து வைத்தது. இருவரும் வெவ்வேறு போலீஸ் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அப்போது காதல் மலர்ந்தது. 

2019ல் திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் தண்டேவாடா நகரில் டிஜிபி போஸ்டிங் போட்டார். ஊரடங்கை அமல்படுத்த இரவுபகலாக உழைக்கும் போலீசாருக்கு ஊக்கமூட்டும் வகையில் ஷில்பா பணியாற்றி வருவதாக சத்தீஸ்கர் மாநில போலீஸ் அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments