குப்பையை சாலையில் கொட்டிச் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!
கோவை மாவட்டம். போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் அருகில் கோவையில் இருந்து குப்பைகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் தினந்தோறும் இந்தப் பகுதியில் வந்து கொண்டு இருக்கின்றன வரும் வாகனங்களில் இருந்து குப்பைகள் கீழே விழும் நிலையினால் வாகன ஓட்டிகளும் பொது மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஒவ்வொரு நாளும் இந்தப் பகுதியில் சுமார் 800 டன் குப்பை வீதம் எடுத்து செல்கின்றன அப்படி செல்லும் டிராக்டர்கள் லாரிகள் சரிவர வலைகள் போட்டு எடுத்துச் செல்வதில்லை என்று குற்றச்சாற்று எழுந்துள்ளன நோய் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற செயலினால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர் இதை உடனடியாக தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தலைமை நிருபர், ஈசா.
Comments