தீவிரமாக நடைபெற்று வருகிறது உக்கடம், ஆத்துப்பால மேம்பாலம்..!!

   -MMH

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடங்கி ஆத்துப்பாலம் வரை முடிவடையும் இந்த உயர்மட்ட மேம்பாலம் 80 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஆற்றுப் பாலத்தில் இருந்து மீதமுள்ள 20 சதவீத பணிகள் தொடங்கிவிட்டன.

போக்குவரத்துவாகன, நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஆற்றுப் பாலத்தில் இருந்து உக்கடம் வரை, உயர்மட்ட மேம்பாலம்  அமைக்கப்பட்டு  பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், மீதமுள்ள 20 சதவீத ஆத்துப்பாலம் உயர்மட்ட மேம்பால வேலைகள். ராட்சத இயந்திரம் கொண்டு துவங்கப்பட்டு உள்ளது.

இந்த வேலை முடிவடைந்து மேம்பாலம்  மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழல் கிடைக்கும் என்று, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஈசா.

Comments