சுவரில் ஆணி அடித்ததால் கட்டையால் அடித்து காலை உடைத்தார் வீட்டு உரிமையாளர்!!

     

-MMH
     செங்குன்றம் - சுவரில் ஆணி அடித்த பிரச்னையில், வீட்டு உரிமையாளரின் மகன், வாடகைக்கு இருந்தவரை கட்டையால் அடித்து, அவரது காலை உடைத்தார்.

சென்னை செங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும், ஹரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன்(42) என்பவர் ஆறு மாதத்திற்கு முன் வாடகைக்கு குடியேறினார்.நேற்று முன்தினம் மாலை சீனிவாசன் வீட்டு உரிமையாளர் ஹரியிடம் அனுமதி பெற்று வீட்டில் சுவாமி படம் மாட்டுவதற்கு ஆணி அடித்துக்கொண்டிருந்தார். 

அவருக்கு உதவியாக அவரது தம்பி தீனதயாளன்(40) இருந்தார். அப்போது வீட்டு உரிமையாளர் ஹரியின் மகன் கவுதமன் எதற்காக ஆணி அடிக்கிறீர்கள் எனக்கேட்டு தகராறு செய்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து கவுதமன் உருட்டு கட்டையால் சீனிவாசனை தாக்கினார். அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது, கவுதமனை தடுக்க சென்ற தீனதயாளனுக்கு இடது கை விரலில் எலும்பு முறிந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் நேற்று காலை செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கார்த்திக், தண்டையார்பேட்டை.



Comments