பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் குடுகுடுப்பைக்காரன்!! பெற்றோர்களே உஷார்!!

  -MMH 

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி வைகை நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள்  குடுகுடுப்பைக்காரன் போல் வேடமணிந்து வந்ததாகவும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மை தடவ முயன்றதாகவும்,  இதனைக் கண்ட குழந்தைகள் பயந்துபோய் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பெற்றோர் வேகமாக வந்து சம்பந்தப்பட்ட இடத்தில் கண்காணித்தபோது மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர் என்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. இதை அறிந்த பொள்ளாச்சி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சந்தேகப்படும்படியான மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார் கூறுகையில்," சம்பந்தப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதுபோன்று மர்மநபர்கள் இல்லை,  இருந்தாலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் தாமதிக்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வீண் வதந்திகளை யாரும்  நம்ப வேண்டாம்" என தெரிவித்தார். 

-M.சுரேஷ்குமார்.

Comments