கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு.! களத்தில் இறங்கிய டீன்..!! மக்கள் வரவேற்பு!!!
கோவை மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் சுகாதார சீர் கேடு அவ்வப்போது எழுவதும் பிறகு சரிசெய்வதும் தொடர்கதையாகி வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கான சிறப்பு வார்டுகள் சரியாக பராமரிக்க படாமலும்,குப்பை காடாக இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் நமது புலனாய்வு குழு கலத்தில் சென்று பார்த்த போதுதான் நமக்கு அதிர்ச்சி தகவலை காணமுடிந்தது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிறப்பு வார்டில் குப்பைகள் குவியலாக குவிக்கப்பட்டு உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வண்ணம் இப்படி இருப்பது நோய் தொற்றை இன்னும் அதிகமாக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வரிடம் (டீன்) கேட்டபோது அவர் அளித்த பதில்:-
உடனடியாக குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய வரே, மக்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் சுகாதாரம் பொறுத்த வரையில். குப்பைகளை கொட்டும் போது நிரம்பும் தருவாயில் இருப்பின்,அதை வேறு இடத்தில் அருகில் உள்ள குப்பை கூடையில் இட வேண்டும்.ஒரே இடத்தில் இடுவதால் அனைவருக்கும் சிரமம் ஏற்படும். பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறினார்.
இது போன்ற பொது இடங்களில் மக்களை பாதுகாப்பாகவும் சுகாதாரம் ஆகியவற்றை பராமரிக்க மருத்துவ நிர்வாகம் சரியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், எதுவும் சாத்தியப்படாது என்பது மறுக்க முடியாத உண்மை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பீர்முகமது,குறிச்சி.
Comments