கொள்ளையடித்த பணத்தை உடனடியாக மீட்ட மன்னார்குடி காவல் துறையினரை பாராட்டியே எஸ் பி கயல்விழி!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசுப் பள்ளி ஆசிரியரிடமிருந்து 4.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஆந்திர மாநில கொள்ளையர்களை 24 மணி நேரத்திற்குள் பிடித்த மன்னார்குடி காவல்துறையினர்.
கடந்த 21ம் தேதி அரிச்சபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் கண்ணன் என்பவர் மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் 4.6 லட்சம் கடன் பெற்று வெளியில் வந்த பொழுது மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப் பிரிவு சப்இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், திருட்டு சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பனாலா. பரசாந்த், மேக்கல பிரசன்ன குமார், மேக்கல பிரவீன்குமார், சன்னா, உதயகிரன் மதத்தை 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4.6 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். உழைத்து சேர்த்த பணத்தில் வீடுகட்டி வாழலாம் என்ற ஆசையோடு இருந்த அந்த குடும்பத்திற்கு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்ததாகக் கூறுகின்றனர் .
இதன்மூலம் மன்னார்குடி மக்களுக்கு காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த ஒரே நாளில் தங்களுடைய கடமையை சிறப்பாக செலுத்திவந்த மன்னார்குடி காவல்துறையினரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய தினம் திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மன்னார்குடி போலீசாரை நேரில் வரவழைத்து பாராட்டியதோடு கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க தொகை ரூ.4.60 லட்சத்தை உரியவர்களிடம் திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி அவர்கள் பணத்தை ஒப்படைத்தார் பின்பு சிறப்பாக செயலாற்றிய காவல்துறையினரை, கண்காணிப்பாளர் அவர்கள். வெகுவாக பாராட்டினார். இந்தச் சம்பவம் மன்னார்குடி மக்களுக்கிடையே மனமகிழ்ச்சியும் பாராட்டுதலையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ரைட் ரஃபிக், பார்த்திபன், ஈசா.
Comments