தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!!

      -MMH

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வில் நாளைய வரலாறு பத்திரிக்கையாளர்கள் திரு மைதீன்  அவர்களும் திரு ராஜசேகரன் அவர்களும்.

தேர்தல் பற்றிய உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள நாளைய வரலாறு பத்திரிக்கையை தொடர்ந்து படியுங்கள். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குடி கருப்ப முதலியார் கோட்டை அருந்தவபுரம்  சாலியமங்கலம் திருபுவனம் அரு மலைக்கோட்டை செண்பகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து  வாக்களிக்க வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

வாக்களிக்கும் இந்த சமுதாய  கடமையானது ஒரு திருவிழா போலவே கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கடும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது.

மக்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து  செல்வதை  காணும்பொழுது   இந்தியர்களாய்  நாம் பெருமிதம் கொள்ள முடிகிறது. 

செண்பகபுரத்தில் வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர் ஒருவர் கூறும்போது இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருப்பதாகவும்  தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவர தனக்கு ஒரு உரிமை வழங்கப்பட்டதை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் பெருமையுடன் தெரிவித்தார். 

இந்திய தேர்தல் தேர்தல் உலக அளவில்  ஒரு சிறப்பான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இளம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா  நோய் பரவல்  பரவலாக இருந்த போதிலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் சமுதாய பொறுப்புணர்வும் சமூக இடைவெளி விட்டும் வாக்களித்து செல்வதை காணமுடிகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments