ஐநாவின் இரக்கம்!! இறுமாப்பில் மோடி அரசு!!

   -MMH

        கொரோனாவின் இரண்டாம் அலை பரவலாக நாடுமுழுவதும் வீசிவரும் நிலையில் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ஒருபுறம் நோய் முற்றி பலியாகிவருவது ஒருபுறம் இருந்தாலும் , உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டினால் பலியாகின்றவர் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்தவண்ணம் உள்ளது.

பற்றாக்குறையாக இருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினை தங்களுக்கு சாதகதாக பயன்படுத்திவரும் திருடர்கள் "ரெம்டெசிவிர்"  மருந்து என "பேரசிடமால்" மருந்தை விற்றதும் , 'தீயணைப்பான் கருவியை' 'ஆக்ஸிஜன் சிலிண்டர்'  என  விற்றதும் செய்திகளாக வந்திருக்கின்றன. இந்நிலையில்  சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், "தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ள செய்தி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக  ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டடெரெஸின் துணை செய்தித் தொடர்பாளர் 'ஃபர்ஹான்  ஹக்'  செய்தியாளர்களிடம் கூறுகையில் "இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா முன்வந்தது. எனினும் தங்களிடம் போதுமான அளவு உபகரணங்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் ஐ.நா.வின் உதவி தேவைப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆயினும்  தனது உதவியை ஐ.நா. திரும்பப் பெறப்போவதில்லை என்றும் இந்த உதவியைப் பெறுவதற்கு எப்போதும் வேண்டுமானாலும் ஐ.நா.வை இந்தியா அணுகலாம்  தன்னால் முடிந்த வழிகளில் இந்தியாவுக்கு உதவ ஐ.நா. தயாராகவே  இருப்பதாக தெரிவித்துள்ளது.

-நவாஸ்.

Comments