வீணாகும் குடிநீரை கண்டுகொள்ளாத நகராட்சி!! சரி செய்து தர மக்கள் கோரிக்கை!!

      -MMH

கோவை மாவட்டம்:  வால்பாறை அக்காமலை பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வால்பாறைக்கு வந்து கொண்டிருக்கிறது. அவ்வழியில் குழாய்கள் உடைந்து குடிநீர் அதிக அளவில் வீணாகி போய்க்கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

தண்ணீர் வீணாக ஓடுவதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்றும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத இந்த காலகட்டத்தில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் ஓடுவதை பார்க்கும் பொழுது அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறுகின்றனர். இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மக்களும் பொது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்குமார், ஈசா.

Comments