ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அ.தி.மு.க கோரிக்கை!!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அண்ணா திமுக மனுதாக்கல் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் மனுவை அளித்து விட்டு வந்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த கட்சியின் மூத்த அமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். வருகின்ற தேர்தலில் திமுக எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று பல முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக அவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மேற்கு கொளத்தூர் திருவண்ணாமலை காட்பாடி,திருவல்லிக்கேணி உட்பட ஐந்து தொகுதிகளை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.இராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments